in

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி திமுக அமைப்பாளர் சிவா பேட்டி..

புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி
திமுக அமைப்பாளர் சிவா பேட்டி..

புதுச்சேரி திமுக காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்டுள்ள தொகுதி இழுபறி காரணமாக காங்கிரஸ் தலைவர்கள் இன்று டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர் அவசர அழைப்பு.

விடுக்கப்பட்டதன் அடிப்படையில் காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் தலைமையில் வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் முதல் நாராயணசாமி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

இவர்கள் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி மற்றும் எண்ணிக்கையை இறுதி செய்கின்றனர்.

இந்த நிலையில் புதுச்சேரி வில்லியனூர் தொகுதியில் திமுக அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில அமைப்பாளர் சிவா அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்…புதுச்சேரியில் திராவிட மாடல் ஆட்சி அமைவது உறுதி என்றும்.

30 தொகுதிகளிலும் திமுக இருக்கிறது ..30 தொகுதிகளிலும் காங்கிரஸ் இருக்கிறது.. அவர்களோடு தான் இணைந்து பணியாற்றுவோம் ..

கூட்டணிக்குள் குழப்பம் இல்லை ..வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது ..
இது எங்களுக்கான தேர்தல் …வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என திமுக அமைப்பாளர் சிவா தெரிவித்தார்.பாஜக- என்.ஆர். காங்கிரஸ் மோதல் என்பது நாடகம் என சிவா விமர்சித்தார்.

What do you think?

கிட்னி மோசடி புகாரால் கதறிய ஜூலி! ”த.வெ.க நிர்வாகி தான் காரணம்!”

திருவாவடுதுறை ஸ்ரீ பிரஹன்னாயகி அம்மன் திருநடன பெருவிழா திரளான பக்தர்கள் விழாவை கண்டு களித்து வருகின்றனர்.