தமிழ்ப் பல்கலைக்கழக காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தெரிவித்தார்.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் 1981-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் நாள் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் தொடங்கி வைக்கப்பட்டது.
சுமார் 972.70 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், மற்ற சாதாரணப் பல்கலைக்கழகங்களைப் போல் இல்லாமல் மொழி, இனம், மானுடவியல் போன்ற பன்முகத் தன்மைகளை ஆராயும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
இது ஐந்து முக்கியப் புலங்களைக் கொண்டுள்ளது. மொத்தம் 25 துறைகள் மற்றும் 5 புலங்களுடன் இது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு இணையாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது. இதன் முதல் துணைவேந்தராகப் புகழ்பெற்ற ஆய்வாளர் வ. ஐ. சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.
தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாகத் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. தகுதியான பதிவாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் இல்லாத நிலை நீடிக்கிறது.
முன்பு நாடகத் துறை மற்றும் பதிப்பகத் துறை போன்றவை மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வந்தன. தற்போது பதிப்பகம் மூடப்பட்டு, ஆய்வுப் பணிகள் பெருமளவு குறைந்துள்ளன.
பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 1000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் தற்போது வீடு விற்பனை, வனத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறை போன்ற பிற தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு, தற்போது பல்கலைக்கழகத்தின் வசம் மிகக் குறைந்த அளவே நிலம் உள்ளது.
நிதி மற்றும் துறை மாற்றம்,உயர்கல்வித் துறையின் கீழ் இருக்க வேண்டிய இந்தப் பல்கலைக்கழகம், தற்போது தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் உள்ளது. இதை உயர்கல்வித்துறையின் கீழ் இணைத்து உரிய நிதியை அளிக்க வேண்டும்.
உடனடியாகத் தகுதியான துணைவேந்தர் மற்றும் பதிவாளரை நியமிக்க வேண்டும். பல்கலைக்கழகத்தை மீண்டும் உயர்கல்வித் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும்.
பல்கலைக்கழக நிலங்களை மற்ற நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூன் மாதம் முதல் தொடர் போராட்டங்களும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக மணியரசன் அறிவித்தார்.


