மகளிர் சுய உதவி குழு பெண்கள் புதிய அதிநவீன மதி அங்காடியை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்ற வகையில் தமிழக அரசு பல்வேறு கடன் உதவிகள் தொழில் பயிற்சிகள் வழங்கி வருகிறது.
இதன் மூலம் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுக்கள் பல்வேறு பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார்கள் மேலும் மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரிக்க கூடிய பொருட்களை சந்தப் படுத்தும் வகையில் மகளிர் திட்டம்.
மூலமாக மதி அங்காடிகள் திறக்கப்பட்டு வருகிறது அந்த வகையில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்களை சந்தைப்படுத்தும் வகையில் அதிநவீன மதி அங்காடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மதி அங்காடி திறப்பு விழா இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்து கொண்டு மதி அங்காடியை திறந்து வைத்து அங்குள்ள பொருள்களை பார்வையிட்டார்.
தொடர்ந்து முதல் விற்பனையையும் தொடங்கி வைத்தார் இந்த மதி அங்காடியில் பனை ஓலைகளால் செய்யப்பட்ட அழகிய கைவினைப் பொருட்கள் மண்பாண்டங்கள் வாசனை திரவியங்கள் தேன் பொம்மைகள் ஊறுகாய் உள்ளிட்ட பல்வேறு.
வகையான மகளிர் சுய உதவி குழு பெண்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் எங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி செல்கிறார்கள்.
இதன் மூலம் எளிதாக மகளிர் சுய உதவி குழு பெண்கள் தயாரித்த பொருட்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது இந்த தொடக்க நிகழ்ச்சியில் மகளிர் திட்ட அலுவலர் நாகராஜன் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, பவானி, வைதேகி, சுப்புலட்சுமி உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


