in

தமிழகத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள் தமிழகத்தில் நாடக்கிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை. ஒரே வாரத்தில் 15 பாலியல் சம்பவங்கள் தமிழகத்தில் நாடக்கிறது.

தமிழகத்தில் பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் இருந்து எதையும் கட்டுப்படுத்தவில்லை.

காவல்துறை ஏவல் திமுகவின் ஏவல் துறையாக மாறிவிட்டது.தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாணவி சம்பவம் மற்றோரு நிர்பயா சம்பவம் போன்று உள்ளது.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி.வி.ஆர்‌ ராஜ்சத்யன்ான் தலைமையில், தூத்துக்குடி நிர்பயா என்று வாயில் கருப்புக் துணி கட்டி கொண்டு நீதி வேண்டி கவனயீர்ப்பு போராட்டம்.

டெல்லியில் நடைபெற்ற நிர்பயா போல தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டம் நடை பெற்றுவரும் வேளையில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க, கழகத் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் மதுரை வண்டியூர் தெப்பக்குளம் அருகே கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வி. வி ஆர் ராஜ்சத்யன் தலைமையில் வாயில் கருப்பு கொடி கட்டி நீதி வேண்டும் என்று கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

இந்த போரட்டத்தில் பகுதி கழகச் செயலாளர் வண்டியூர் செந்தில்குமார் , ஒன்றிய கழகச் செயலாளர் சேனாபதி, பார்த்திபன், கார்த்திகேயன், மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் கௌரிசங்கர், மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மணிகண்டன்.

மாமன்ற உறுப்பினர் மாணிக்கம், பகுதி கழக செயலாளர் கறிக்கடை கிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தியாகு மற்றும் அம்மா பேரவை ராஜேந்திரன், ஏ.பி.பி, பாண்டியன், வசந்த் பால்பாண்டி, ரெயின்போ கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

வி.வி.ஆர்.ராஜ்சத்யன் கூறியதாவது

நான் இங்கு அரசியல்வாதியாக வரவில்லை ஒரு சகோதரனாக, தந்தையாக ஒரு இளம் சிறுமிக்கு ஏற்பட்ட துயரத்திற்கு நீதி கேட்டு வந்துள்ளேன்.

நடைபெற்ற சம்பவத்தை பார்க்கும் பொழுது தமிழகத்தில் சமுதாய சீர்கேடு நடைபெற்று உள்ளது. ஒரு பெண் குழந்தை பட்டப்பகலில் வெளியே நட முடியாத அளவில் வெட்கக்கேடாக தமிழகம் உள்ளது .இதனால் தமிழகம் புரையோடி போய் உள்ளது.

தொடர்ந்து தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரங்களில் மட்டும் 15 பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு அடிப்படை காரணம் போதைப் பொருள் கலாச்சாரமாகும் காவல்துறை இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

டெல்லியில் நடைபெற்ற நிர்பயா சம்பவத்தை போல தற்போது தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதால் தூத்துக்குடி நிர்பயா என்ற பெயரில் கவனயீர்ப்பு போராட்டத்தை நாங்கள் நடத்தி வருகிறோம்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் 9.30.

மணிக்கு குழந்தை வரவில்லை என்று புகார் கொடுக்க செல்கிறார்கள் ஆனால் காவல்துறை எங்க லிமிட் இல்லை என்று அலட்சியம் காட்டி சந்தேக கண்ணுடன் மிகவும் மோசமாக வார்த்தைகளை கூறியுள்ளனர் .

அந்த காவல்துறையினர் மீது சஸ்பெண்ட் என்று கண்டு துடைப்பாக நடவடிக்கை எடுத்துள்ளனர் இது குற்றவியல் சம்பவமாக பார்க்க வேண்டாமா ?

இதையெல்லாம் முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் போட்டோ சூட் நடத்துகிறார் .ஆனால் எடப்பாடியார் இன்றைக்கு களத்தில் சென்றுள்ளார் இது குறித்து.

நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பப்பட்டது, தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலமாகவும் இதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது , அதே போல முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தொடர்ந்து மூன்று நாட்கள் களத்தில் இருக்கிறார்.

ஆனால் முதலமைச்சர் தங்களுக்கு வேண்டிய கருத்துக்களை மீம்ஸ் கருத்துக்களை போட்டு ரிலீஸ்களை நடத்துகிறார். இன்றைக்கு தமிழகத்தில் ஒரு சமுதாய சீரழிவு ஏற்பட்டுள்ளது.

இன்றைக்கு காவல்துறை பின்னோக்கி சென்று விட்டது‌ .தமிழகம் 50 ஆண்டுகாலம் பின்னோக்கி சென்று விட்டடது. கலாச்சாரத்தால் தமிழகத்திற்கு சீர்கேடு ஏற்பட்டுள்ளது .

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்க சென்ற இடத்தில் இது போன்ற நிகழ்வு நடைபெற்றது வேதனைக்குரிய சம்பமாகும். குறிப்பாக நிரந்தர டிஜிபி கூட இன்னும் நியமிக்கவில்லை.

ஒரு பொறுப்பு டிஜிபி போதை கலாச்சாரம் அதிகரித்துவிட்டது ஆனால் பாலியல் குற்றங்கள் குறைந்து விட்டது என்று தற்போது பல்வேறு விளக்கங்களை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது இதன் மூலம் சிறுமிக்கு ஏற்பட்ட பாதிப்பை பூசிமொழுக பார்க்கிறார்கள் .

இன்றைக்கு அந்த சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமை நாளைக்கு யாருக்கு வேணாலும் ஏற்படலாம். இந்த சம்பவத்தை கூட திமுகவின் கூட்டணி கட்சிகள் எதையும் பேசவில்லை எல்லாம் கூட்டணிக்காக தான்.

ஏற்கனவே சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி சம்பவம் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியது .அதேபோல மதுராந்தகத்தில் நடைபெற்ற சம்பவத்தில் குற்ற பதிவேடுகளில் உள்ள குற்றவாளிகள் இது போன்ற குற்றங்களை செய்தனர்.

இந்த குற்றப் பதிவேடு குற்றவாளிகளை சுதந்திரமாக விட்டது யார்? இன்றைக்கு முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது தனது தங்கை கனிமொழி வைத்து சரி செய்ய முயன்ற போது அப்பகுதி மக்கள் கனிமொழியை விரட்டினர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் எதிரொலித்துள்ளது

இன்றைக்கு காவல்துறை தங்களது கடமையை சரியாக செய்யாமல் திமுகவின் ஏவல் துறையாக உள்ளது.

மீட்டும் எடப்பாடியார் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் உருவாகி இதற்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படும்.

What do you think?

”அப்போ கேப்டன்..இப்போ தளபதியா?”விஜய்யை வறுத்தெடுத்த வடிவேலு!

மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…