in

பட்டுக்கோட்டையில் இன்று காலை தேர்வுக்கு சென்ற மாணவர்களை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு.

பட்டுக்கோட்டையில் இன்று காலை தேர்வுக்கு சென்ற மாணவர்களை வெறிநாய் கடித்ததால் பரபரப்பு.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் – 20 பேரை கடித்து குதறிய வெறி நாயை உடனடியாக பிடித்த நகராட்சி நிர்வாகம்.

வெறி நாய் கடித்து தேர்வு எழுதி வரும் மாணவிகளின் நலன்கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ள 108 அரசு ஆம்புலன்ஸ், நடமாடும் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள்பேட்டி.

பூமாரி – வெறிநாய் கடித்த மாணவியின் தாயார், அதிராம்பட்டினம்தமிழ்நாடு முழுவதும் இன்று பத்தாம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் இன்று பெரியதெரு பகுதியில் நடந்து சென்ற இரண்டு பேரை வெறி நாய் ஒன்று கடித்தது. அதனைத் தொடர்ந்து அந்த நாய் சாலையிலேயே ஓடி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 10க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது.

அதனைத் தொடர்ந்து அதே நாய் அதே சாலை வழியாக மாணவிகள் தேர்வு எழுத வருவதற்காக திறந்திருந்த பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்திற்குள் திடீரென புகுந்தது. அப்போது தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவிகள் 6 மாணவிகளையும் கடித்தது.

இதனால் பள்ளி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகிலிருந்த ஆசிரியர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் துணையுடன் வெறிநாய் கடித்த 6 மாணவிகளையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்‌.

உடனடியாக அங்கு 6 மாணவிகளுக்கும் தடுப்பு ஊசி போடப்பட்டு முதலுதவி செய்து தேர்வு எழுத அனுப்பி வைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வெறி நாய் கடித்து படுகாயமடைந்த 14க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் பணியாளர்கள் உதவியுடன் அந்த வெறி நாயை வலையை போட்டு அப்படியே லாபகமாக பிடித்தனர்.

வெறி நாய் கடித்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பொதுமக்களை நகராட்சித் தலைவர் சண்முகப்பிரியா செந்தில்குமார், முன்னாள் எம்.எல்.

ஏக்கள் ஏனாதி பாலசுப்ரமணியன், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சி.வி.சேகர் உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும் படுகாயமடைந்த மாணவிகளின் பெற்றோர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதனிடையே தேர்வு எழுதி வரும் மாணவிகளின் நலன் கருதி பட்டுக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலேயே அரசு ஆம்புலன்ஸ் மற்றும் நடமாடும் மருத்துவமனை, டாக்டர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உள்ளனர்.

What do you think?

விமர்சகர்களை ஓடவிட்ட ரவி மோகன்! இன்ஸ்டாகிராமில் வெடித்த உரிமைப் போர்!

அஜித்தின் ‘திக் திக்’ நிமிடங்கள்! துபாய் டூ சென்னை..எப்படி வந்தார்? வைரல் வீடியோ