ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் 194ம் ஆண்டு தேர் திருவிழா
ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் 194ம் ஆண்டு தேர் திருவிழா மகா ரத உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து வழிபாடு…..
திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி தேர் திருவிழா கடந்த 01ம் தேதி தொடங்கியது.
விழாவின் முதல் நாளான கடந்த 01ம் தேதி இரவு விநாயகர் ஊர்வலம், 02ம் தேதி இரவு பாலமுருகன் ஊர்வலமும், 03ம் தேதி இரவு பராசக்தி ஊர்வலமும், 04ம் தேதி இரவு பரிவரத தேவதைகள் ஊர்வலமும் வாண வேடிக்கையும் மகா கும்பம் அருள் வாக்கும் நடைபெற்றது.
இந்த மகா கும்பத்தில் குழந்தை இல்லாத தம்பதிகள் கலந்து கொண்டு சாமிக்கு படைத்து பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் மகா கும்பத்தில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு படையலிட்ட பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஐந்தாம் நாளான இன்று ஸ்ரீபோர்மன்ன லிங்கேஸ்வரர் மகா ரத உற்சவம் நடைபெற்றது.
இதில் மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்தனர்.
இந்த தேர்த்திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


