in

மின் கம்பத்தில் சிக்கிய நாகப்பட்டினம் அகஸ்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 

மின் கம்பத்தில் சிக்கிய நாகப்பட்டினம் அகஸ்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் 

 

நாகப்பட்டினத்தில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற அகஸ்தீஸ்வரர் கோவில் தேரோட்டம் போதிய முன்னேற்பாடுகள் இல்லாததால் மின் கம்பத்தில் சிக்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் தேரோட்டம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் சாமி திருக்கோவில் சுமார் 400 ஆண்டு பழமை வாய்ந்த திருக்கோயில் மாசி மகா திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றது.

100ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக கட்டமைக்கப்பட்ட தேர் இன்று சிவன் பார்வதி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

புதிய தேருக்கு தேங்காய் உடைத்து பூஜைகள் செய்து இன்று காலை புறப்பட்ட சிறிது தூரத்திலேயே மரத்தில் சிக்கிக் கொண்டது.

இதனை அடுத்து ஜேசிபி எந்திர உதவியுடன் மரங்கள் அகற்றப்பட்டது அடுத்து சிறுது ஒரு தூரத்தில் மின் கம்பத்தில் தேர் சிக்கிக் கொண்டது.

 

தேரில் சிக்கிக்கொண்ட மின்கம்பியை அகற்ற பத்துக்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மின் கம்பிகளை அகற்றினார்.

100 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற தேரோட்டம் நடைபெற்றதால் பக்தர்கள்
மிகுந்த ஆர்வத்துடன் தேர் இழுக்க வந்திருந்த நிலையில் முன்னேற்பாடுகள் எதுவும் செய்யப்படாததால் தேரோட்டம் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக நடுவீதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டதால் பக்தர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

What do you think?

நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு கப்பல் சேவை

திண்டிவனம் வீடூர் கிராமம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலய 3 ஆம் ஆண்டு மயான கொள்ளை விழா