in

செஞ்சியில் பாஜக தேர்தல் அறிக்கை மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

செஞ்சியில் பாஜக தேர்தல் அறிக்கை மற்றும் விவசாயிகளிடம் கருத்து கேட்பு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விழுப்புரம் மாவட்ட பாஜக விவசாய அணி சார்பில் மக்களுக்காக, மக்களிடமிருந்து என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

செஞ்சி சட்ட மன்ற தொகுதி அமைப்பாளர் வி.பி.என்.கோபிநாத் தலைமையில் விவசாய அணி மாநில துணை அமைப்பாளர் ஜின்ராஜ் வரவேற்றார். பாஜக. மாவட்ட தலைவர் வினாயகம், முன்னாள் மாவட்ட தலைவர் வி.காளிதாஸ், விவசாய அணி மாவட்ட தலைவர்கள் சௌரிராஜன், சிவசுப்பரமணியம், பாஜக. மாவட்ட பொதுச்செயலர் ஜி.அன்பழகன், மாவட்ட பொதுச்செயலர் பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் விவசாய அணி மாநில பொதுச்செயலர் ஆர்.ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு .

சிறப்புரையாற்றி பாஜக தேர்தல்அறிக்கையில் இடம் பெற வேண்டிய கருத்துக்கள் மற்றும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், வணிக சங்கங்கள், பல்வேறு சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் தேர்தல் அறிக்ககையில் இடம் பெற வேண்டிய கருத்துக்களை மனுக்களாக அளித்தனர்.

இதில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை தெரிவித்தும் மனுக்களாகவும் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் என்.ஏ.ஏழுமலை, தங்க.ராமு, சுப்பிரமணி, மேகலாஜெயின், முத்துலட்சுமி, எத்திராஜ், மண்டல தலைவர்கள் பிரசன்னவெங்கடாஜலபதி உள்ளிட்ட பாஜக.வினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார்(எ)தாராசிங் நன்றி கூறினார்.

What do you think?

விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் பிரம்மாண்டமா கல்யாணம்

வெறும் ‘நடிகை’ மட்டும் இல்ல இப்ப ஒரு ‘ரோல் மாடல்’