திடீரென நெல் கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கொண்டு வந்த நெல் நெல் முட்டைகளை வைத்து காத்திருக்கும் அவல நிலை
விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்யாததால் திண்டிவனம் செஞ்சி சாலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் எதிரில் விவசாயிகள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் வல்லம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் விவசாயிகளிடம் பெறப்படும் நெல் மூட்டைகளை பெற்று வெளி மாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்புவது வழக்கம்.
இந்த நிலையில் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று விவசாயிகள் கொண்டு வரப்பட்ட சுமார் 8-ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் மணிலா,கேழ்வரகு கம்பு போன்ற தானிய வகைகளை விவசாயிகள் திடீரென கொள்முதல் செய்யாததால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆன்லைன் மூலம் 1.0 மூலம் ஈனம் திட்டத்தில் வியாபாரி நெல் மூட்டைகளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது தற்பொழுது ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகள் முன் அறிவிப்பு இல்லாமல்,ஈனாம் திட்டத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தெரிகிறது.
இதனால் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு கொள்முதல் செய்யாமல் சென்று விட்டனர்.
இதனை அறியாமல் பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைநிலங்களில் விளைவித்த நெல்மணிகளை செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்திற்கு கொண்டு வந்து நேற்று இரவு முதல் தற்போது வரை காத்துக் கொண்டிருந்ததால். ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் எதிரே திண்டிவனம் செஞ்சி செல்லும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் செய்த விவசாயிகளிடம் செஞ்சி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் கலந்து சென்றனர்.
இது குறித்து ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பு அதிகாரியிடம் கேட்டபோது திடீரென எங்களுக்கு உயர் அதிகாரிகள் தெரிவித்ததின் பேரில் 1.0 ஈனாம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும்.மேலும் தற்போது 2.0 ஈனாம் திட்டத்தின் மூலம் நெல் மூட்டை கொள்முதல் செய்ய வேண்டும் என வியாபாரிகளிடம் தெரிவித்ததாகவும்,
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்று விட்டதாகவும்,இது குறித்து எங்கள் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து விவசாயிகள் பேசுகையில் இரவு பகலாக கஷ்டப்பட்டு உழைத்து விவசாயம் செய்தும் அறுவடை செய்து வாடகை வாகனத்தின் மூலம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தால் இங்கு எங்களை பல மணி நேரம் காக்க வைத்து அலகழிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகள் கொண்டு வந்த நெல் தானியங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் சாலை மறியல் போராட்டம் செய்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது.


