தீபம் ஏற்ற வலியுறுத்தி கந்த சஷ்டி கவச பாடல்கள் பாடி விழிப்புணர்வு
திருப்பரங்குன்றம் தீப தூணில் தொடர்ந்து தீபம் ஏற்ற வலியுறுத்தி கந்த சஷ்டி கவச பாடல்கள் பாடி இந்து முன்னணியினர் விழிப்புணர்வு…..
திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் பகுதியில் திருப்பரங்குன்றம் தீப தூணில் தொடர்ந்து தீபம் ஏற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கந்த சஷ்டி கவச பாடல்கள் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார்.
ஆனாலும் தீபம் ஏற்ற பல்வேறு முயற்சிகள் செய்து திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற முடியாமல் உள்ளது.

இதனை கண்டித்து திருவண்ணாமலை இந்து முன்னணி சார்பில் எடப்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் முன்பு பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள் உள்ளிட்டோர் திருப்பரங்குன்றம் மலை மீது தொடர்ந்து தீபம் ஏற்ற வேண்டும் என கந்த சஷ்டி கவச பாடல்கள் பாடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


