in

‘தாய் கிழவி’ ஒரு ‘கெத்தான’ பாட்டியா ஒரு படம் வரப்போகுது


Watch – YouTube Click

‘தாய் கிழவி’ ஒரு ‘கெத்தான’ பாட்டியா ஒரு படம் வரப்போகுது

 

இப்போ தமிழ் சினிமாவுல புதுசு புதுசா யோசிக்கிறாங்கடா! அந்த வரிசையில இப்போ ‘தாய் கிழவி’ அப்படின்னு ஒரு படம் வரப்போகுது.

சிவகுமார் முருகேசன்ங்கிற ஒரு புது டைரக்டர் எடுத்திருக்காரு. கதையோட மெயின் ரோல்ல நம்ம ராதிகா சரத்குமார் மேடம் நடிச்சிருக்காங்க.

படத்தோட டைட்டிலே ஒரு மாதிரியா இருந்தாலும், இது ஒரு செம ஜாலியான சோஷியல் மெசேஜ் சொல்ற படமாம். ராதிகா மேடம் இதுல வெள்ளை முடி, ஒரு மாதிரி வித்தியாசமான டிரஸ்னு செம சுறுசுறுப்பா நடிச்சிருக்காங்க.

சும்மா வீட்ல இருக்குற பாட்டி மாதிரி இல்லாம, சமூகத்தோட கட்டுபாடுகளை எல்லாம் உடைச்சு எறியுற ஒரு ‘கெத்தான’ பாட்டியா இதுல வர்றாங்க.

டிரைலரை பார்க்கும்போதே தெரியுது, அவங்க இதுல வேற லெவல் பெர்பார்மன்ஸ் குடுத்திருப்பாங்கன்னு! இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்னா, இந்தப் படத்தை நம்ம சிவகார்த்திகேயன் அவரோட எஸ்கே புரொடக்ஷன்ஸ் மூலமா தயாரிச்சிருக்காரு.

எப்பவும் புது டைரக்டர்ஸை என்கரேஜ் பண்ற எஸ்கே, இந்தத் தடவை ஒரு பெண் மையக் கதையை (Female Centric Movie) கையில் எடுத்திருக்காரு. படத்துல சிங்கம் புலி, முனிஷ்காந்த், பாலசரவணன், இளவரசுன்னு ஒரு பெரிய காமெடி பட்டாளமே இருக்கு.

அதனால சிரிப்புக்கு கண்டிப்பா கேரண்டி உண்டு! சமீபத்துல நடந்த டிரைலர் லான்ச் ஃபங்ஷன்ல தான் ராதிகா மேடம் அந்த ‘குண்டைத்’ தூக்கிப் போட்டாங்க.

அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? “உண்மையில இந்த கதை முதல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்காக எழுதப்பட்டது. ஆனா அவரு ‘என்னால இந்த வேஷத்துல நடிக்க முடியாது’ன்னு சொன்னதால, கதையை அப்படியே ஒரு லேடி கேரக்டருக்கு ஏத்த மாதிரி மாத்தி என்னை நடிக்க வச்சுட்டாங்க!

“அப்படின்னு ராதிகா மேடம் சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க. இதைக் கேட்டதும் அங்க இருந்தவங்க எல்லாம் ஷாக் ஆகிட்டாங்க. ஒருவேளை ரஜினி சார் அந்த ரோல்ல நடிச்சிருந்தா எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சு பாத்துக்குங்க ஆனா, ஒரு பெரிய ஹீரோவுக்கான கதையை அப்படியே ஒரு பெண் கதாபாத்திரத்துக்கு மாத்தி எடுக்குறதுங்கிறது ஒரு பெரிய விஷயம் ஒரு வயசான பாட்டியை வச்சு முழுநீளக் கதையை யோசிச்ச டைரக்டரையும், அதைத் தயாரிச்ச சிவகார்த்திகேயனையும் கண்டிப்பா பாராட்டணும்.

மொத்தத்துல ‘தாய் கிழவி’ படம் ரிலீஸான அப்புறம் தான் தெரியும், அந்த ரஜினி சார் கதையில ராதிகா மேடம் எவ்வளவு தூரம் கலக்கியிருக்காங்கன்னு. நாமளும் ஆவலா வெயிட் பண்ணலாம்.


Watch – YouTube Click Shorts

What do you think?

பசங்களுக்கு ரிக்வெஸ்ட் வச்ச ஷாலினி! மேடையில் உருக்கமான பேச்சு

தீபம் ஏற்ற வலியுறுத்தி கந்த சஷ்டி கவச பாடல்கள் பாடி விழிப்புணர்வு