கமுதியில் மது போதையில் தாறுமாறாக காரை ஒட்டி கடைக்குள் புகுந்ததால் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி குண்டாறு கரையில் அமைந்துள்ள மதுக்கடையில் மது அருந்திவிட்டு பேருந்து நிலையம் அருகே வரும் போது காரில் இருந்தவர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக திடீரென தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர் .


பின்னர் காரை ஓட்டிய இளைஞர் அப்பகுதியில் இருந்த பழக்கடை இருசக்கர வாகனங்கள் கார் உள்ளிட்டவற்றை மீது தாறுமாறாக மோதி சேதம் ஏற்படுத்தினார் .
இதில் இரண்டு இளைஞர்களுக்கு கால் முடிவு ஏற்பட்டது.
கார் தாறுமாறாக வருவதை கண்ட பொதுமக்கள் பதறி அடித்து ஓடினார்கள்.அங்கிருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து கார்களை சேதப்படுத்தினர். காரை ஓட்டி வந்த நபரை கடுமையாக தாக்கினர் .
பேருந்து நிலையம் பகுதியில் பாதுகாப்பு பணிக்காக நின்றிருந்த ஒரே ஒரு காவலர் எவ்வளவோ முயற்சி செய்தும் குடிபோதையில் காரை இயக்கிய நபரை தடுக்க முடியாமல் போராடினார்.
இதனால் கமுதி பேருந்து நிலையம் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. கால் முறிவு ஏற்பட்டவர்களை போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


