மகா சிவராத்திரியை முன்னிட்டு 20-ஆம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி தொடங்கியது
சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பாக பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் மயூர நாட்டியாஞ்சலி திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்தின் 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் நல்லாசியுடன் இருபதாம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழாவை சிறப்பு அழைப்பாளர்கள்,சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர்.

இதில் முதல் நாள் நிகழ்ச்சியாக பத்மஸ்ரீ லீலா சாம்சனின் மாணவிகளான சீனாவை சேர்ந்த நிஷா,ஜெசி ஆகியோரின் நடனம் பார்வையாளர்களை கவரும் வண்ணம் இருந்தது.சென்னை கோவை சேலம் மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பெங்களூரு மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் 500க்கும் மேற்பட்டோரின் கலைநிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.
நிகழ்ச்சியில் சப்த ஸ்வரங்கள் அறக்கட்டளை அறங்காவலர்கள்,சிறப்பு விருந்தினர்கள்,மயிலை சப்தஸ்வரங்கள் நிறுவனர் பரணிதரன், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் அகஸ்டின்விஜய், மற்றும் மயிலாடுதுறை முக்கிய பொறுப்பாளர்கள் அரசியல்வாதிகள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


