மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த்
மயிலாடுதுறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மூலம் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை தியாகி நாராயன சாமி மேல்நிலை பள்ளியில் பொதுநலன் மற்றும் நோய் தடுப்பு துறை மூலம் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மாத்திரை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு சுகாதாரத்துறை இணை இயக்குனர் அஜித் பிரபுகுமார் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனர் பிரபா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக நகராட்சி மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் தாமரைசெல்வன் நன்றி கூறினார்.


