திருவண்ணாமலை கடும் பனிப்பொழிவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு குறைந்த வேகத்தில் செல்கின்றனர்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை சென்னை தேசிய நெடுஞ்சாலையான திண்டிவனம் சாலைகளிலும் மற்றும் ஜவ்வாதுமலை, உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கடும் பனிப்பொழிவு காரணமாக சாலையில் எதிரே வரும் வாகனங்களில் தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு குறைந்த வேகத்தில் செல்கின்றனர்.

இதனால் பேருந்துகள் கனரக வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டு குறைந்த வேகத்தில் செல்கின்றன.
மாவட்டத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

