in

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக நேற்று இரவு தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் காலம் முறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரவு நேர காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியான 313 ஐ நிறைவேற்ற வலியுறுத்தியும் இரவு நேரத்தில் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மாவட்ட ஆட்சியர் நுழைவாயில் முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் செல்போன் டார்ச் லைட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

பள்ளியில் 41-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரி பரிசு வழங்கினார்

அருள்மிகு காசி விஸ்வநாதர் திருவிளக்கு பூஜையில் 1000 க்கு மேற்பட்ட பெண்கள் திருவிளக்கேற்றி சிறப்பு வழிபாடு.