in

அங்கன்வாடி ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

அங்கன்வாடி ஊழியர்கள் கஞ்சி காய்ச்சி குடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்

பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஐந்தாவது நாளாக கையில் திருவோடு ஏந்தி . கஞ்சி காய்ச்சி குடிக்கும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 5-வது நாளாக தொடர் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தினந்தோறும் பல்வேறு போராட்டங்களில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இன்று நூற்றுக்கணக்கான சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் கையில் திருவோடு ஏந்தி . கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர் போராட்டத்தில் தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி படி அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் சிறப்பு பென்ஷன் அகவிலைப்படி வழங்கவேண்டும்.

இளநிலை உதவியாளர்கள் நிலையில் ரூ.19,500 அடிப்படை காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.1,500 அடிப்படை காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

What do you think?

பழனி அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் மாசித் திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோபால்பட்டி அருகே கடையில் இருந்து ரூ.30 ஆயிரம் திருட்டு: CCTV-யில் பதிவானது திருடன் செயல்