in

கும்பகோணம் அருகே  அருள்மிகு ஶ்ரீ தேவி, பூதேவி ஸ்மேத வெங்கடாசலபதி சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பகோணம் அருகே  அருள்மிகு ஶ்ரீ தேவி, பூதேவி ஸ்மேத வெங்கடாசலபதி சுவாமி திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் அமைந்துள்ள பதியான பகவான் தர்மத்தை நிலை நிறுத்தவும் சாதுக்களை ரக்ஷிப்பதற்காகவும் சதா ஆனந்தமயமான ஸ்ரீவைகுண்டம் என்னும் தன் நிலையை விட்டு கீழே இறங்கி பூலோகம் எழுந்தருளி இந்த கலியில் பக்தர்களை ரக்ஷக்க வேண்டி திருக்கோவில்களில் சாந்நித்தியமாக அருள்பாலித்து வருகின்ற திவ்ய தேசங்களில் அ௫ள்மிகு வெங்கடாஜலபதி பெ௫மாள் தி௫க்கோயில், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மீகத் தலமாகும்.

  இக்கோயிலின் கருவறையில் நின்று நிலையில் அருள்மிகு ஶ்ரீ தேவி பூதேவி ஸ்மேதராய் வெங்கடாஜலபதி பெ௫மாள் முதன்மைத் தெய்வமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

மேற்கு முகமாக 10 அடி உயரம் கொண்ட துக்கக்ஷயகர ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார் இந்த கோவில் கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.

ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற வைணவ தலத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ரூபாய் 2 லட்சம் செலவில் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று பூர்ணாவதி சாற்று முறை கோஷ்டிவுடன் முதல் கால யாகசாலை பூஜையுடன் தொடங்கி இன்று விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, பாலிகை, கும்ப, மண்டல, பிம்ப, அக்னி என 3 கால யாகசாலை பூஜைகளுடன் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

சினிமாவில் பார்ப்பது வேறு அரசியல் வேறு என்பதை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது.