in

AK 64 ஷூட்டிங் பையர் ‘கிளாஸ்’ அண்ட் ‘மாஸ்’


Watch – YouTube Click

AK 64 ஷூட்டிங் பையர் ‘கிளாஸ்’ அண்ட் ‘மாஸ்’

 

அஜித் இப்போ கார் ரேஸிங்ல ரொம்ப பிஸியா இருக்காரு. அதனாலயே அவரோட அடுத்த பட அறிவிப்பு கொஞ்சம் லேட்டானாலும், இப்போ கிடைச்சிருக்க நியூஸ் சும்மா ‘வெறித்தனமா’ இருக்கு!

15 வருஷம் கழிச்சு ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் ஆனாலும், ஏதோ புது படம் ரிலீஸ் ஆன மாதிரி ரசிகர்கள் தியேட்டரைத் திருவிழாவா மாத்திட்டாங்க.

விநாயக் மகாதேவன் கேரக்டருக்கு இன்னைக்கும் இருக்குற மவுசு குறையவே இல்ல!

‘குட் பேட் அக்லி’ படத்துல ஒரு வெறித்தனமான ‘பேன் பாய்’ சம்பவத்தை செஞ்ச ஆதிக் ரவிச்சந்திரன், இப்போ மறுபடியும் அஜித்தை இயக்கப் போறாரு. ஏற்கனவே இவங்க காம்போவுல வந்த படம் போன வருஷம் வசூல்ல செம வேட்டை ஆடுச்சு.

இப்போ AK 64 படத்துலயும் அதே கூட்டணி சேர்றதுனால எதிர்பார்ப்பு எகிறி இருக்கு. இவ்வளவு நாளா இந்தப் படத்தைத் தயாரிக்கப் போறது யாருன்னு ஒரு சந்தேகம் இருந்தது. இப்போ மும்பையைச் சேர்ந்த பென் மீடியா (Pen Studios) நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்க முன்வந்திருக்காங்களாம்.

இவங்க ஏற்கனவே ஷங்கர் இயக்கத்துல ‘வேள்பாரி’ படத்தை பிரம்மாண்டமா தயாரிக்கப் போறதா பேசப்பட்டவங்க. இப்போ ‘AK 64’ படத்தையும் இவங்களே எடுக்குறதுனால, படம் ரொம்ப பிரம்மாண்டமா இருக்கும்னு தெரியுது.

மார்க் ஆண்டனி’ படத்துக்கு அப்புறம் ஆதிக்கோட கிராப் எங்கேயோ போயிருச்சு. அஜித்தோட தீவிர ரசிகரான இவரு, இந்தப் படத்தை வெறும் மாஸ் மசாலா மட்டும் இல்லாம, எல்லாத் தரப்பு மக்களுக்கும் புடிச்ச மாதிரி செம ‘கிளாஸ்’ அண்ட் ‘மாஸ்’ கதையா ரெடி பண்ணிருக்காராம்.

அஜித் அவரோட ரேஸிங் வேலைகளை முடிச்ச உடனே, AK 64 ஷூட்டிங் பையர் (Fire) மாதிரி கிளம்பப்போகுது!

தளபதியோட டான்ஸ் ஒரு பக்கம், ஏகே-வோட ரேஸிங் அண்ட் மூவி அப்டேட் ஒரு பக்கம்னு சோஷியல் மீடியாவே இன்னைக்கு ரணகளமா இருக்குல?


Watch – YouTube Click Shorts

What do you think?

சின்னத்திரை ரசிகர்களுக்கு குட் நியூஸ்! ‘ வரப்போகும் புதிய ஷோ… ஷாக்கிங் தகவல்..!

வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத் திருமாளிகையில், திருஅறை தரிசனம்