in

மருத்துவ ஆய்வு நிபுணர்கள் கோயம்பேட்டில் திடீர் சாலை மறியல்

மருத்துவ ஆய்வு நிபுணர்கள் கோயம்பேட்டில் திடீர் சாலை மறியல்

தங்களுக்கு அரசு பணி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு

உடனடியாக அரசாணை 262 ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தல்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் வாசலில் பதிவு செய்த மருத்துவ ஆய்வு நிபுணர்கள் மனித சங்கிலி மற்றும் திடீர் சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சாலையின் ஓரத்தில் கொண்டு சென்றனர்.

  

போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ ஆய்வு நிபுணர்கள்  கூட்டமைப்பினர், அரசாணை 262 ரத்து செய்ய வேண்டும், மருத்துவ ஆய்வு நிபுணர்கள் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், குறைந்தபட்சம் ஆயிரம் பணியிடங்களை ஆவது உருவாக்க வேண்டும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

அதுமட்டுமின்றி மருத்துவ ஆய்வு நிபுணர்கள் பணிக்கு படித்து முடித்துவிட்டு பதிவு செய்து காத்திருக்கும் தங்களை விட்டுவிட்டு, தற்போது பணியில் இருக்கும் ஓராண்டு படித்த பணியாளர்களுக்கு முறைகேடாக பணிகள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக தேர்தலுக்குள் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டனர்.

What do you think?

நல்லாசிரியர் விருது பெற்ற அரசு பள்ளி ஆசிரியருக்கு  கத்தியால் வெட்டு

கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு குடிநீர் அனுப்பும் பணி முற்றிலும் நிறுத்தப்படும் அபாயம் உள்ளது.