in

முதலியார் குப்பம் கெங்கை அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

முதலியார் குப்பம் கெங்கை அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

 

முதலியார் குப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு கெங்கை அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த முதலியார் குப்பத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கும் அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு கெங்கை அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவானது கடந்த வெள்ளிக்கிழமை அன்று கணபதி ஹோமம் ,லட்சுமி ஹோமம்,நவகிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதல் கால யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாவதி செய்யப்பட்டு யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு செய்து ஆலயம் வளம் வந்து அருள்மிகு கெங்கை அம்மன் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்திற்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு தமிழில் வேத மந்திரங்கள் முழங்க சிவாச்சாரர்கள் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து அருள்மிகு மாரியம்மன் அருள்மிகு கெங்கை அம்மன் ஆகிய மூலவர்கள் உட்பட விநாயகர், முருகப்பெருமான் உள்ளிட்ட பஞ்ச மூர்த்தி களுக்கு புனித நீர் ஊற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேக விழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை திமுக பேரூர் செயலாளர் மோகன்தாஸ் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்.

What do you think?

மயிலம் முருகன் கோயிலில் தைப்பூசம் திருவிழா