in

தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு

தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு

 

பட்ஜெட்னா திட்டங்களும் இருக்கனும். திருக்குறளும் இருக்கனும்,
பைக்னா ஹெல்மெட் இருக்கனும் என்கிற வாசகத்துடன் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு தலா விலையில்லாமல் இரண்டு லிட்டர் பெட்ரோல், அரை கிலோ ஸ்வீட், திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.

தஞ்சையில் தனியார் அறக்கட்டளை சார்பில் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

தஞ்சை ஆற்று பாலம் அருகில் நடந்த விழிப்புணர்வு நிகழ்வில்,

ஹெல்மெட் போட்டு வந்தவர்களை நிறுத்தி, அவர்களை பாராட்டும் வகையில் அனைவரையும் பெட்ரோல் பங்குக்கு அழைத்து சென்று சர்ப்ரைசாக ஆளுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் தங்கள் வாகனத்திற்கு நிரப்பி கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

பின்னர் அனைவருக்கு தலா அரை கிலோ ஸ்வீட், மற்றும் திருக்குறள் புத்தகம் வழங்கி அனுப்பி வைத்தனர்.

தஞ்சையில் காவல் துறையினர் ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், தனியார் தொண்டு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மத்திய பட்ஜெட்டில் திட்டங்களும் இல்லை, திருக்குறளும் வாசிக்கவில்லை என்பதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.

What do you think?

 55-வது படம் பழைய ‘மாஸ்’ தனுஷை மறுபடியும் கொண்டு வரும்

கும்பகோணம் திருச்சேறை தைப்பூச திருவிழா தேரோட்டம்