in

 தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா

 தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா

 

விஜய் கட்சி ஆரம்பிச்சு இன்னைக்கு 3-வது வருஷத்துல அடி எடுத்து வைக்குது. விக்கிரவாண்டி, மதுரைன்னு ரெண்டு பிரம்மாண்ட மாநாடுகளை முடிச்சுட்டு, இப்போ 2026 தேர்தலை நோக்கி வண்டி வேகமா போயிட்டு இருக்கு.

சென்னை பனையூர்ல இருக்குற கட்சி அலுவலகத்துல இன்னைக்கு விழா நடந்தது.

விஜய் வந்து கொடியை ஏத்தி வச்சு, கொள்கை தலைவர்களுக்கு மரியாதை செஞ்சாரு. அப்போ மேடையில பாடகர் வேல்முருகன் ஒரு செம குத்து பாட்டு பாடினாரு.

அந்தப் பாட்டைக் கேட்ட உடனே நம்ம தளபதிக்கு “வைப்” (Vibe) ஆகிடுச்சு. சும்மா இருப்பாரா? அங்கேயே மேடையில சட்டென இறங்கி ஆட்டம் போட ஆரம்பிச்சிட்டாரு!

இதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகிகள் கைதட்டி, விசில் அடிச்சு அந்த இடத்தையே அதிர வச்சிட்டாங்க. இந்த வீடியோ இப்போ சோஷியல் மீடியாவுல தீயா பரவிட்டு இருக்கு!இந்த விழாவை முன்னிட்டு விஜய் ஒரு அறிக்கை விட்டிருக்காரு:

“ரெண்டு வருஷத்தை சாதாரணமாவும், சில நேரத்துல அசாதாரணமாவும் கடந்து வந்திருக்கோம்.”

“2026 தேர்தல் இப்போ புதுசா ஒரு அரசியல் சூழலை உருவாக்கியிருக்கு. அதுக்கு காரணம் நம்ம அரசியல் வருகைதான் அப்படின்னு எல்லாரும் பேசுறாங்க.” “தெளிவான பிளான், சரியான அணுகுமுறையோட தேர்தல் அரசியல்ல ஜெயிச்சு, அதிகாரத்தை நோக்கிப் போவோம்”னு ரொம்ப நம்பிக்கையா சொல்லிருக்காரு.கரூர்ல நடந்த பிரச்சனைகள், மத்த நெருக்கடிகள்னு எல்லாத்தையும் தாண்டி தவெக நிர்வாகிகள் இப்போ தேர்தல் வேலைகள்ல ரொம்ப தீவிரமா இறங்கிட்டாங்க.

விஜய்யோட இந்த “டான்ஸ்” வீடியோ அவங்களுக்கெல்லாம் ஒரு பெரிய பூஸ்ட்டா அமைஞ்சிருக்கு.

தளபதியை ஸ்கிரீன்ல டான்ஸ் ஆடி பார்த்து ரசிச்ச ரசிகர்களுக்கு, இப்போ நிஜமாவே கட்சி மேடையில அவர் ஆடுனது பெரிய விருந்து தான்!

What do you think?

அனிமே லவரா நீங்க !

 55-வது படம் பழைய ‘மாஸ்’ தனுஷை மறுபடியும் கொண்டு வரும்