தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலத்தில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் மனைவியின் மீது டீசல் ஊற்றி கொளுத்திய கணவன்
தஞ்சாவூர் மாவட்டம் கீழவாசல் பகுதியில் வசிப்பவர் ராஜ்குமார் வயது 40 இவர் மனைவி வினோதினி வயது 34 இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மனைவி மீது சந்தேகம் பட்டு பிரச்சனை ஏற்பட்டதால் வினோதினி தனது கணவரை பிரிந்து பிள்ளைகளுடன் பாபநாசத்தில் தனது தந்தையுடன் தங்கி கபிஸ்தலத்தில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார் இந்நிலையில் கபிஸ்தலம் டீக்கடையில் வேலை முடித்து நடந்து வந்த பொழுது கும்பகோணம் – திருவையாறு தேசிய நெடுஞ்சாலையில் நடுரோட்டில் கேனில் டீசல் வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்த கணவன் ராஜ்குமார் தனது மனைவி மீது டீசலை ஊற்றி கொளுத்தி உள்ளார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தனர் இதில் மனைவி வினோதினிக்கு முகம் கை கால்களில் தீக்காயம் அடைந்து அதே இடத்தில் சுருண்டு விழுந்தார்.
அதனை தொடர்ந்து மனைவி மீது டீசல் ஊற்றி கொளுத்திய கணவனை பகுதி மக்கள், நடந்து சென்ற பாதசாரிகள் அனைவரும் ஆத்திரத்தில் அடித்து உதைத்து படுகாயத்தை ஏற்படுத்தினர்.
தகவல் அறிந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

