in

​திருவாடானை அருகே தொங்கும் நிலையில் பாலம்: வாகன ஓட்டிகள் அச்சம் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

​திருவாடானை அருகே தொங்கும் நிலையில் பாலம்: வாகன ஓட்டிகள் அச்சம் – சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானையில் இருந்து வடக்கூர் செல்லும் சாலையில் உள்ள மணிகண்டி கிராமத்திலிருந்து பிரிந்து செல்லும் சாலை திருவடிமிதியூர் கிராமத்திற்குச் செல்கிறது.

இந்தச் சாலையில் மணிமுத்தாறு கிளை ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பாலம் கட்டப்பட்டது. திருவடிமிதியூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராம மக்கள் திருவாடானை செல்வதற்கு இந்தப் பாலத்தையே பிரதானமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது இந்தப் பாலம் முறையான பராமரிப்பு இன்றி மிகவும் மோசமடைந்துள்ளது. ​பாலத்தின்  அடிப்பகுதியில் உள்ள கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதனால் பாலம் எந்த நேரத்திலும் இடியும் நிலையில், அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற தோற்றத்தை அளிக்கிறது.

பாலத்தின் இருபுறமும் இருக்க வேண்டிய பாதுகாப்புத் தடுப்புச் சுவர்கள் முழுமையாக சேதமடைந்துள்ளன.குறுகிய மற்றும் பலவீனமான இந்தப் பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இவ்வழியாகச் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

​இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “திருவடிமிதியூர் கிராமத்திற்குச் செல்லும் முக்கிய பாதையாக இது உள்ளது. பாலம் மிகவும் பலவீனமாக இருப்பதால் பெரும் விபத்து ஏற்படும் முன், மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட துறையினரும் உடனடியாகத் தலையிட்டு பாலத்தைச் சீரமைக்க வேண்டும் அல்லது புதிய பாலம் கட்டித் தர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளனர்

What do you think?

தேர்தலில் போட்டியிட விசில் சின்னம் அறிவித்ததை தொடர்ந்து தவெக சார்பில் விசில் அடித்து ஊதி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது