in

ஜனநாயகன்’ ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? கோர்ட் கொடுத்த அதிரடி ட்விஸ்ட்!? தனி நீதிபதியின் உத்தரவு ரத்து


Watch – YouTube Click

 

விஜய்யோட கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ இப்போ தியேட்டருக்கு வர்றதுக்கு முன்னாடியே கோர்ட், கேஸ்னு ஒரு பெரிய அரசியல் போர்க்களத்தையே சந்திச்சுட்டு இருக்கு.

இந்தப் படத்தோட ரிலீஸ்ல இப்போ என்னதான் சிக்கல், விஜய் அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாடி நடிச்ச கடைசிப் படம்ங்கிறதால, இதுமேல பயங்கர எதிர்பார்ப்பு இருக்கு. ஆனா, சென்சார் போர்டு இந்தப் படத்துக்கு முட்டுக்கட்டை போடுறதால ரிலீஸ் தேதி தள்ளிப்போயிட்டே இருக்கு.

படம் போன வருஷம் டிசம்பர்லயே தணிக்கைக்கு (Censor) போயிருச்சு. முதல்ல ‘U/A’ கொடுக்கலாம்னு சொன்னாலும், சில அதிகாரிகள் ஆட்சேபனை தெரிவிச்சதால ‘மறுஆய்வுக் குழுவுக்கு’ அனுப்பிட்டாங்க.

இதனால ஜனவரி 9-ம் தேதி வர வேண்டிய படம் தள்ளிப்போச்சு. படக்குழு சென்னை ஹைகோர்ட்டுக்கு போனாங்க. அங்க வழக்கை விசாரிச்ச தனி நீதிபதி, “உடனே படத்துக்கு யு/ஏ (U/A) சான்றிதழ் கொடுங்க”ன்னு அதிரடியா உத்தரவு போட்டாரு. இதைக் கேட்டு ரசிகர்கள் செம குஷியானாங்க.

“தனி நீதிபதி சொன்னதை எங்களால ஏத்துக்க முடியாது“ன்னு தணிக்கை வாரியம் (CBFC) ரெண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுல அப்பீல் பண்ணாங்க. அங்க தனி நீதிபதியோட உத்தரவுக்கு தற்காலிகத் தடை விழுந்துச்சு.

விடாம படக்குழு உச்ச நீதிமன்றம் வரைக்கும் போனாங்க. ஆனா அங்க, “நீங்க மறுபடியும் ஹைகோர்ட்டுக்கே போய் முறையிடுங்க”ன்னு சொல்லி மனுவைத் தள்ளுபடி பண்ணிட்டாங்க.

இன்னைக்கு ஹைகோர்ட்ல நடந்த விசாரணையில ஒரு முக்கியமான தீர்ப்பு வந்திருக்கு:”ஜனநாயகன் படத்துக்கு உடனே சான்றிதழ் கொடுக்கணும்”னு தனி நீதிபதி போட்ட உத்தரவை ரெண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்போ ரத்து செஞ்சிருக்காங்க.

இந்த வழக்கை மறுபடியும் தனி நீதிபதியே விசாரிக்கணும்னு சொல்லிட்டாங்க. ஆனா, இந்தத் தடவை தணிக்கை வாரியத்தோட தரப்பு நியாயங்களையும் முழுசா கேட்டு, முறையான வாய்ப்பு வழங்கிட்டு அப்புறமா முடிவெடுக்கணும்னு உத்தரவு போட்டிருக்காங்க.


Watch – YouTube Click Shorts

What do you think?

பழனியில் தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பாலியல் குற்றச்சாட்டுல சிக்கியிருக்காரு நதீம் கான்