பழனியில் தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்வான ஜனவரி 31 திருக்கல்யாணமும் , பிப்ரவரி 1 தைப்பூசம் திருவிழாவும் நடைபெறவுள்ளது
திண்டுக்கல் மாவட்டம் பழனி மூன்றாம் படைவீடான பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் தைப்பூச திருவிழா இன்று அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோவில் கொடியேற்றத்துடன் துவங்கியது.

இத்திருவிழாவானது பத்து நாள் நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஜனவரி 31 முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும் நடைபெறும், பிப்ரவரி 1 தைப்பூசம் நாளன்று மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
திருவிழாவின் 10ஆம் திருவிழாவான தெப்பத் திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. இன்று முதல் அருள்மிகு முத்துகுமாரசுவாமி் வள்ளி தெய்வானை சமேதராக தங்கமயில் ,வெள்ளி மயில்,ஆட்டுகிடா வெள்ளி காமதேனு உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்.
இதனை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகை தர துவங்கியுள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு வசதிக்காக 3000 போலிசார் ஈடுபடுத்தவுள்ளனர். மேலும் தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட திருவிழாவுக்கான ஏற்பாடுகளையும் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


