in

“இடுப்புல கை வச்சாங்க..கேவலமா பேசுனாங்க!” கதறிய ‘நாகினி’ நடிகை மௌனி ராய்!! ஒருத்தர் கூட தடுக்கல…


Watch – YouTube Click

 

ஹரியானா மாநிலம் கர்னால் அப்படிங்கிற இடத்துல நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில மௌனி ராய் கலந்துகிட்டாங்க. அங்க வந்திருந்த கூட்டம் அவங்ககிட்ட நடந்துகிட்ட விதம் ரொம்பவே அநாகரிகமா இருந்திருக்கு.

அத்துமீறல்: மேடைக்கு போகும்போது அங்கிருந்த சில பேர் போட்டோ எடுக்குற மாதிரி வந்து, மௌனி ராயோட இடுப்புல கை வச்சிருக்காங்க. உடனே அவங்க கையை எடுங்கன்னு சொல்லியிருக்காங்க.

இது அங்கிருந்த சிலருக்கு பிடிக்கல போல. மௌனி ராய் கையை எடுக்க சொன்னதும், மேடையை சுத்தி இருந்தவங்க ஆபாசமா பேச ஆரம்பிச்சிருக்காங்க. அதுமட்டும் இல்லாம அருவருப்பான சைகைளையும் காட்டி அவமானப்படுத்தியிருக்காங்க.

“முதல்ல அமைதியா இருந்து பார்த்தேன். ஆனா அவங்க அடங்குற மாதிரி தெரியல. அங்க இருந்த யாரும் அவங்களை தட்டி கேட்கவோ இல்ல அங்கிருந்து அனுப்பவோ முன்வரலங்கிறது தான் எனக்கு பெரிய வருத்தம்”னு சொல்லியிருக்காங்க.

கூட்டத்தோட இந்த அநாகரிக செயலால் ரொம்பவே மனமுடைஞ்சு போன மௌனி ராய், நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்திட்டு கிளம்பலாம்னு நினைச்சிருக்காங்க. அப்புறம் ஒரு வழியா மனசை தேத்திக்கிட்டு, கமிட் ஆன வேலையை முடிச்சு கொடுத்துட்டு வந்திருக்காங்க.

“என்னை மாதிரி ஒருத்தருக்கே இந்த நிலைமைன்னா, இப்பதான் சினிமாவுக்கு புதுசா வர்ற பொண்ணுங்களோட பாதுகாப்பு என்ன ஆகுறது? நாங்க கஷ்டப்பட்டு உழைச்சு முன்னேற நினைக்கிறோம்.

ஆனா எங்களை இப்படி அவமானப்படுத்துறாங்களே.. இவங்க வீட்டு பெண்களுக்கு இப்படி நடந்தா இவங்க சும்மா இருப்பாங்களா?” அப்படின்னு ரொம்ப ஆவேசமா கேட்டிருக்காங்க.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுமேல கண்டிப்பா நடவடிக்கை எடுக்கணும்னு மௌனி ராய் வேண்டுகோள் விடுத்திருக்காங்க.


Watch – YouTube Click Shorts

What do you think?

உலக நன்மைக்காக சுமங்கலி பூஜை. 600க்கம் மெற்பட்ட சுமங்கலிப் பெண்கள்கலந்துகொண்டு மலா்கள் மற்றும் குங்குமத்தால் அா்ச்சனை செய்தனா்

மம்மூட்டி – மோகன்லால் இணையும் ‘பேட்ரியாட் ரிலீஸ் தேதி கன்பார்ம்! மெகா அப்டேட்!