மங்காத்தா ‘ரீ-ரிலீஸ்’ ரகலை! 15 வருஷம் ஆனாலும் குறையாத ‘தல’ மாஸ்!
2011-ல வெங்கட் பிரபு இயக்கத்துல அஜித் நடிச்ச 50-வது படம் ‘மங்காத்தா’. அப்போவே இந்தப் படம் ஒரு கல்ட் கிளாசிக். இப்போ 15 வருஷம் கழிச்சு நேத்து ரீ-ரிலீஸ் பண்ணாங்க.
ஆனா தியேட்டர்ல நடந்த கொண்டாட்டத்தைப் பார்த்தா, இது பழைய படம்னே சொல்ல முடியாது, அந்த அளவுக்கு ஒரு புதுப் படத்துக்கான ஹைப் இருந்துச்சு!மங்காத்தா வெற்றிக்கு முக்கிய காரணமே அஜித்தோட அந்த நெகட்டிவ் கேரக்டர் தான்.
நரைச்ச முடியோட, அந்த ஸ்டைலான லுக் அப்போவே ஒரு ட்ரெண்ட் செட்டர். “ஹீரோன்னா நல்லவனாத்தான் இருக்கணும்”ங்கிற விதியை உடைச்சு, காசுக்காக எதையும் செய்யுற வினாயக் மகாதேவன் கேரக்டரை அஜித் செமையா பண்ணியிருப்பாரு. இன்னைக்கும் ரீல்ஸ் எடுத்தா யுவனோட அந்த ‘மங்காத்தா தீம்’ மியூசிக் இல்லாம இருக்காது.
அந்த பிஜிஎம் தான் படத்தோட உயிர்நாடி! ரீ-ரிலீஸ் ட்ரெண்ட்ல இப்போ மங்காத்தா ஒரு பெரிய ரெக்கார்டு பண்ணியிருக்கு. தமிழ்நாட்டுல மட்டும் முதல் நாள்ல ₹4.65 கோடி வசூல் செஞ்சிருக்கிறதா தகவல் கிடைச்சிருக்கு. இதுக்கு முன்னாடி விஜய் நடிச்ச ‘கில்லி’ ரீ-ரிலீஸ் அப்போ ₹4.23 கோடி வசூல் பண்ணி சாதனை படைச்சிருந்தது.
இப்போ அந்த ரெக்கார்டை ‘மங்காத்தா’ தட்டித் தூக்கிட்டு முதலிடத்துக்கு வந்துருச்சு. மொத்த இந்தியாவிலும் சேர்த்து கிட்டத்தட்ட ₹5 கோடிக்கும் மேல வசூல் செஞ்சிருக்காம்.
தியேட்டர் வாசல்ல அஜித் ரசிகர்களோட அட்டகாசம் தாங்க முடியல! பாலாபிஷேகம், பட்டாசு, பிரம்மாண்ட கட்-அவுட்னு தியேட்டரே திருவிழா மாதிரி இருந்துச்சு.
“ப்ரோமோஷன் கிடையாது, புது சீன் கிடையாது.. ஆனா ரெக்கார்டு மட்டும் நிக்குது!”ன்னு ரசிகர்கள் சோஷியல் மீடியாவுல கெத்து காட்டிட்டு வர்றாங்க. அஜித் கூட அர்ஜுன் மோதும் காட்சிகள், திரிஷா, பிரேம்ஜி, ராய் லட்சுமினு ஒரு பெரிய பட்டாளமே இதுல நடிச்சிருப்பாங்க.
கிரிக்கெட் சூதாட்டத்தை மையமா வச்சு வெங்கட் பிரபு கொடுத்த அந்த ‘கேம் ஆஃப் கார்ட்ஸ்’ (Game of Cards) திரைக்கதை இப்போ இருக்குற 2K கிட்ஸையும் கவர்ந்துடுச்சு.

