துவக்கி வைத்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்டாலின் பேச்சு.
கல்வியும் விளையாட்டும் படிக்கும் குழந்தைகளுக்கு அவசியம்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து மாவட்ட காவல் கண்கானிப்பாளர் ஸ்டாலின் பேச்சு
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 40 வது ஆண்டு விளையாட்டு விழாவில் பள்ளியின் ஆட்சி மன்ற குழு தலைவர் பேராசிரியர் சிவ.முருகேசன் தலைமையில் பள்ளியின் நிர்வாக செயலர் வி.பாஸ்கரன்,பள்ளி முதல்வர் ஆர்.சரவணன் முன்னிலையில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

பின்னர் பேசுகையில் மாணவ மாணவிகளிடம் ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்றும்,மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் முழு கவனம் செலுத்த வேண்டும் என்றும் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று மாணவ மாணவிகளிடம் அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து மாநில,மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும்,கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டு தெரிவித்தார் விழாவில் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

