நெற்கதிர்கள் திடீரென சாய்ந்ததால் விவசாயி கவலை
வத்திராயிருப்பு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் திடீரென சாய்ந்ததால் விவசாயி கவலை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் விவசாயம் என்பது பிரதானமாக நடைபெற்று வருகிறது . இந்த நிலையில் இலந்தைகுளம் பகுதியில் கருணாகரன் என்பவர் பாரம்பரிய நெல் வகையான தூயமல்லி நெல் சுமார் ஒரு ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு அறுவடை செய்வதற்கு தயாராக இருந்த நிலையில் திடீரென நெற்கதிர்கள் வயலுக்குள் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் .
மேலும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கருணாகரன் கூறுகையில், ஒரு ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாகவும்,திடீரென எதிர்பாராத விதமாக சுமார் ஒரு ஏக்கருக்கு மேல் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்ததால் மிகுந்த கவலை அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் சாய்ந்ததால் அறுவடை செய்ய முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.


