ஜனநாயகன் வழக்கு,, தீர்ப்பு தள்ளிவைப்பு!!!.. தணிக்கை வாரியத்தை வறுத்தெடுத்த ஹைகோர்ட்! ??
பொங்கலுக்கு வரவேண்டிய படம், இப்போ கோர்ட்ல ‘கிளைமாக்ஸ்‘ சீன்ல நிக்குது.
இன்னைக்கு ரெண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வுல நடந்த முக்கியமான விஷயங்கள் இதுதான்: ஜனவரி 9-லேயே படம் வந்திருக்கணும். சென்சார் போர்டு சர்டிபிகேட் தராததால படம் தள்ளிப்போயிட்டே இருக்கு.
முதல்ல ஒரு நீதிபதி “U/A 16+” சர்டிபிகேட் கொடுங்கன்னு சொன்னாங்க.
ஆனா, சென்சார் போர்டு அதை எதிர்த்து மேல்முறையீடு பண்ணி தடையுத்தரவு வாங்கிட்டாங்க.
தணிக்கை வாரியம் (Censor Board) இன்னைக்கு சில அதிரடி பாயிண்டுகளை வச்சாங்க: மறு ஆய்வு குழு: “படம் பத்தி சில புகார்கள் வந்ததுனால, நாங்க அதை மறு ஆய்வு குழுவுக்கு (Review Committee) அனுப்ப முடிவு பண்ணோம். இதை ஜனவரி 5-லேயே தயாரிப்பு நிறுவனத்துக்குச் சொல்லிட்டோம்.”
“தயாரிப்பு நிறுவனம் 500 கோடி ரூபா போட்டிருக்கோம்னு சொல்லி உடனடி ரிலீஸ்க்கு அனுமதி கேட்க முடியாது. தணிக்கை வாரியம் பதில் சொல்ல எங்களுக்குக் கால அவகாசம் வேணும்.”
தலைமை நீதிபதி தணிக்கை வாரியத்தை நோக்கி சில கேள்விகளைத் தொடுத்தாரு, அதுதான் யார் பார்த்தது?: “சென்னை மண்டல வாரியத்துல யார் படத்தைப் பார்த்தாங்க?” (வாரியம் பதில்: “யாரும் பார்க்கல, டைரக்டா மறு ஆய்வு குழுவுக்குப் போயிடுச்சு”).
“சர்டிபிகேட் கொடுக்காதீங்கன்னு தடுத்தது யாரு? எந்தப் புகாரை வச்சு ரிலீஸை நிறுத்துனீங்க?” “சர்டிபிகேட் தர அதிகாரம் யாருக்கு இருக்கு?” (வாரியம் பதில்: “போர்டுக்கு மட்டும்தான் கடைசி அதிகாரம் இருக்கு”).
இந்த வழக்கோட தீர்ப்புக்காக ஒட்டுமொத்தத் தமிழ் சினிமாவும், விஜய் ரசிகர்களும் காத்துட்டு இருக்காங்க. கோர்ட் இப்போ லஞ்ச் பிரேக் (உணவு இடைவேளை) விட்டுருக்காங்க.
அதுக்கு அப்புறம் தான் இறுதித் தீர்ப்பு வரும்னு எதிர்பார்க்கப்படுது. இந்த வழக்கு ஒரு விஷயத்தை இப்போ தெளிவா புரிய வச்சிருக்கு.
எத்தனை நூறு கோடி செலவு பண்ணிப் படம் எடுத்தாலும், சட்ட ரீதியான ‘சென்சார் சர்டிபிகேட்’ இல்லாம ஒரு ரீல் கூட வெளியே வராதுங்கிறது தான் நிதர்சனம்.


