in

திருஞானசம்பந்தருக்கு பொற்கிழி வழங்கும் சிறப்பு நிகழ்வு

திருஞானசம்பந்தருக்கு பொற்கிழி வழங்கும் சிறப்பு நிகழ்வு

 

சைவ ஆதீனங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீனத்தில் குருபூஜை பெருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருஞானசம்பந்தருக்கு பொற்கிழி வழங்கும் சிறப்பு நிகழ்வு வெகு விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு புதிய நாணயங்கள் வழங்கிய ஆதீனம்.

சைவ ஆதீனங்களில் ஒன்றானதாகவும் இந்தியா சுதந்திரம் அடைய செங்கோல் வழங்கி சிறப்பு செய்த ஆதீனமாக இருந்து விளங்கும் திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதின குரு முதல்வர் குருபூஜை பெருவிழா கடந்த 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இப்பெருவிழாவில் நாள்தோறும் பல்வேறு சைவ சித்தாந்த நூல்கள் வெளியிட்டுவிழா, பல்வேறு வகைகளில் தமிழ் தொண்டு,சமுதாய சேவைகள் செய்து வருபவர்களுக்கு ஐந்தாயிரம் பொற்கிளியுடன் விருது வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்து வருகிறது.விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருஞான சம்பந்த பெருமானுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்வு திருவாவடுதுறை கோமுதீஸ்வரர் கோயிலில் வெகு விமரிசையாக நடந்தது.

கோயிலில் உள்ள விநாயகர் முருகன் சண்டிகேஸ்வரர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு மலர் அலங்காரத்திலும் சிறப்பு பல்லாக்கில் திருஞான சம்பந்த பெருமான் எழுந்தருளி கோயில் நான்கு வீதிகளில் திருவீதியுலாவாக கோயிலுக்கு வந்தடைந்து பொற்கிழி வாங்கும் நிகழ்வு நடந்தது.

திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதினம் 24 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரியா சுவாமிகள் திருமுன்னர் நூற்றுக்கும் மேற்பட்ட ஒதுவா மூர்த்திகள் திருவாசக பதிகங்கள் பாடிட தொடர்ந்து திருஞானசம்பந்தர் பொன் உலாக்கிழி பெறும் நிகழ்வு நடந்தது.

இந்நிகழ்வில் தேவார திருவாசக பதிகம் பாடும் ஓதுவார்களுக்கு ஐந்தாயிரம் பொற்கிழியும்,ருத்ராட்ச மாலையும், சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஞானசம்பந்தர் பொற்கிழி வழங்கும் நிகழ்வின் அருட்பிரசாதமாக புதிய நாணயங்கள் வழங்கப்பட்டன.

What do you think?

தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி சாகுபடியில் உயர் தொழில்நுட்பங்கள் கருத்தரங்கம்

“தங்கத்துல டாய்லெட்டா?” பச்சன் வீட்டு ஆடம்பரத்தைப் பார்த்து மிரண்டு போன நடிகர் விஜய் வர்மா!