பாரதிய ஜனதா கட்சி நித்தின் நபின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிதின் நபின் வரவேற்று மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் உற்சாகமாக பட்டாசு வெடிக்கும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
நேற்று பாஜகவில் தேசிய தலைமையகம் டெல்லியில் புதிய தேசிய தலைவர் பதவி பட்டியல் வெளியானது இதில் நித்தின் நபின் புதிய தேசிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார் நாடு முழுவதும் பாஜக சார்பில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்ட தலைமை தபால் நிலையம் எதிரே மயிலாடுதுறை மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத் தலைவர் நாஞ்சில் பாலு தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
பேருந்தில் பயணித்த பயணிகளுக்கும் சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கும் இனிப்புகளை வழங்கி புதிய தேசிய தலைவரை வரவேற்கும் வகையில் நித்தின் நபின் வாழ்க பாஜக வாழ்க உள்ளிட்ட கோசங்களை எழுப்பி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் நகரத் தலைவர் வினோத், பொதுச் செயலாளர் பாரதி கண்ணன், வழக்கறிஞர் கபிலன், பாஜக பிரச்சார பிரிவு மாவட்டத் தலைவர் மகாகாவேரி சந்திரசேகரன், வர்த்தகப்பிரிவு மாவட்ட தலைவர் தீபம் ராஜ்குமார், மாநில செயலாளர் ராணுவ பிரிவு சுப்பிரமணியன், மாவட்ட அலுவலக செயலாளர் மணிகண்டன், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட செயலாளர் முத்து மாணிக்கவாசகம், மாவட்ட பிரிவு குரு கிருஷ்ணன், தெற்கு ஒன்றிய தலைவர் ஈழவேந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


