‘ஜனநாயகன்’ படம் கோர்ட் படிக்கட்டுல நிக்குறது
பொங்கல் பண்டிகைக்கு வந்திருக்க வேண்டிய ‘ஜனநாயகன்’ படம், சென்சார் சிக்கலால இன்னும் ரிலீஸ் ஆகாம இருக்கு.
இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் KVN புரொடக்ஷன்ஸ் போட்ட மேல்முறையீட்டு மனு இன்னைக்கு காலையில 10:30 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அமர்வு முன்னாடி இந்த வழக்கு வந்தது.
படத்தோட தரப்புல “அவசரமா சென்சார் கொடுக்க உத்தரவிடணும்”னு கோரிக்கை வச்சாங்க. ஆனா நீதிபதிகள் : “இந்த மனுவை நாங்க விசாரிக்க விரும்பல. ஏற்கனவே இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்துல நிலுவையில இருக்குறதுனால, நீங்க அங்கேயே போய்ப் பார்த்துக்கோங்க,”னு சொல்லிட்டாங்க.
உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு வழி பிறக்கும்னு நம்பிட்டு இருந்த படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் இது பெரிய ஏமாற்றமா அமைஞ்சிருக்கு.
ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கை ஜனவரி 21-ஆம் தேதிக்கு ஒத்திவச்சிருக்காங்க.
இப்போ உச்ச நீதிமன்றம் கைவிரிச்சதுனால, தயாரிப்பு நிறுவனம் அந்தத் தேதிக்காகத்தான் காத்திருக்கணும். உச்ச நீதிமன்றத்துல இன்னைக்கு சாதகமா தீர்ப்பு வந்திருந்தா நாளைக்கு (ஜனவரி 16) படம் வர வாய்ப்பு இருந்திருக்கும்.
ஆனா இப்போ அந்த வாய்ப்பு சுத்தமா இல்லாம போயிடுச்சு. ஒரு பக்கம் பொங்கலை முன்னிட்டு மத்த படங்கள் தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்குறப்போ, விஜய்யோட படம் கோர்ட் படிக்கட்டுல நிக்குறது அவரோட ரசிகர்களுக்குப் பெரிய மன வருத்தத்தைத் தந்திருக்கு.
இனி ஜனவரி 21-ஆம் தேதி சென்னை ஹைகோர்ட்ல என்ன நடக்கப் போகுதுங்கிறது தான் அடுத்த பெரிய எதிர்பார்ப்பு.


