in

‘டாக்ஸிக்’ தான் இந்திய சினிமாவோட ஹாட் டாபிக்!


Watch – YouTube Click Shorts

‘டாக்ஸிக்’ தான் இந்திய சினிமாவோட ஹாட் டாபிக்!

 

கீது மோகன்தாஸ் இயக்கத்துல யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானினு ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடிச்சிருக்கிற படம் ‘டாக்ஸிக்’.

மார்ச் 19-ம் தேதி ரிலீஸ்னு அறிவிச்சிருக்காங்க. ஆனா, ஜனவரி 8-ம் தேதி யாஷ் பிறந்தநாளுக்கு வந்த டீசர் இப்போ புதுப் பஞ்சாயத்தைக் கிளப்பிருக்கு. வழக்கமா யாஷ் பட டீசர்னா மாஸ் காட்டும்.

ஆனா இந்த டீசர்ல யாஷ் ஒரு பெண் கேரக்டர் கூட ரொம்ப நெருக்கமா இருக்குற மாதிரி ஒரு சீன் வருது. “யாஷ் மாதிரி ஒரு பெரிய ஸ்டார், குடும்ப ரசிகர்களை வச்சிருக்கிறவர் இப்படிப்பட்ட ஆபாசமான சீன்கள்ல நடிக்கலாமா?”னு சமூக ஆர்வலர்களும் சில ரசிகர்களும் கேள்வி எழுப்பிருக்காங்க.

பெண்களைத் தப்பா காட்டுற மாதிரி சீன்கள் இருக்குன்னு சொல்லி, சில அமைப்புகள் இந்த டீசருக்கு எதிரா புகார் கொடுத்திருக்காங்க.

டீசர்ல யாஷ் கூட அந்த நெருக்கமான சீன்ல நடிச்ச நடிகை பீட்ரிஸ் டாபென்பாக்.
டீசர் ரிலீஸ் ஆனதும் சோஷியல் மீடியாவுல இவங்க மேல பயங்கரமான கமெண்ட்ஸ் வந்துருக்கு.

இதனால மன உளைச்சலுக்கு ஆளான அவங்க, தன்னோட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்டையே நீக்கிட்டதா சொல்லப்படுது. இது இப்போ இன்னும் பெரிய சர்ச்சையாகி இருக்கு.

“முழு படத்தையும் பாக்காம டீசரை மட்டும் வச்சு ஜட்ஜ் பண்ணக்கூடாது. கதையோட ஓட்டத்துக்கு அந்த சீன் முக்கியமா இருக்கலாம்”னு ஒரு தரப்பு சப்போர்ட் பண்றாங்க.

பெரிய நடிகர்களுக்கு சமூகப் பொறுப்பு இருக்கணும். எதை வேணும்னாலும் கருத்து சுதந்திரம்னு சொல்லி நியாயப்படுத்த முடியாது”னு இன்னொரு தரப்பு சொல்றாங்க.

சிலர் என்ன சொல்றாங்கன்னா, “படம் பத்தி நேஷனல் லெவல்ல பேச வைக்கிறதுக்காக படக்குழுவே வேணும்னே இப்படி ஒரு சீன டீசர்ல வச்சிருப்பாங்களோ?”னு ஒரு டவுட்டைக் கிளப்புறாங்க.

உண்மையோ பொய்யோ, இப்போ ‘டாக்ஸிக்’ தான் இந்திய சினிமாவோட ஹாட் டாபிக்!

What do you think?

சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் சாராய ஆலையை கண்டித்து கையில் காளி மது பாட்டிலுடன் ஆர்பாட்டம்

‘ஜனநாயகன்’ படம் கோர்ட் படிக்கட்டுல நிக்குறது