சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் சாராய ஆலையை கண்டித்து கையில் காளி மது பாட்டிலுடன் ஆர்பாட்டம்
கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திரு ஆருரான் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் வாங்கிய 300 கோடி ரூபாய் கடன் முழுவதையும் தீர்த்து வைத்து விடுவிக்க வேண்டும்.

பயிர் கடன் தொகை முழுவதும் வங்கியில் செலுத்திட வேண்டும். வட்டியுடன் மத்திய மாநில அரசுகள் அறிவித்த கரும்பிற்கான முழு தொகையும் அரசு வழங்கிட வேண்டும்.
வெட்டுக் கூலி வாகன வாடகை முழுவதையும் வழங்க வேண்டும். 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 1143 நாளாக போராட்டம் நடத்தி வரும் கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பொங்கல் திருநாளன இன்று கையில் காலி மது பாட்டில்கள் கையில் வைத்துக் கொண்டு விவசாயிகள் துரோகி .

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், என்று கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை ஆய்வாளர்கள் மகாலட்சுமி, சகாய அன்பரசன், ஆகியோர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தால் பரபரப்பு நிலவியது.

