பழைய பொருட்களை எரித்து போகி பண்டிகையை கொண்டாடிய பொதுமக்கள்
வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பதால் திருஷ்டி கழிந்து, தீய சக்திகள் விலகும் என்ற நம்பிக்கையுடன் போகி பண்டிகை கொண்டாட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கிருஷ்ணாபுரம், சிறுகடம்பூர் வி.பி.என் நகர்,சக்கராபுரம், பீரங்கிமேடு உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மார்கழி மாதத்தின் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை பொங்கலுக்கு முன்தினம் கொண்டாடப்படுகிறது.
வீட்டில் உள்ள பழைய துணிகள்,கோரைப்பாய் துடைப்பம், குப்பைகள் உள்ளிட்ட பழமையான பொருட்களை வீட்டு வாசலில் போட்டு எரித்து பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற தத்துவத்தின் அடிப்படையில், பழையனவற்றை எரித்து, வீட்டைச் சுத்தம் செய்து, புதுமைகளை வரவேற்கும் நாளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பழையனவற்றை வீட்டு வாசலில் தீயிட்டு எரித்து பொங்கலோ பொங்கல் போகி பொங்கல் என்று கோஷங்கள் எழுப்பி கொண்டாடினர்.
இது பழைய பொருட்களை எரிப்பதால் வீட்டில் உள்ள திருஷ்டி கழிந்து, தீய சக்திகள் நீங்கும் என நம்புகின்றனர்.மேலும் மனதைச் சுத்தப்படுத்தி, நல்ல எண்ணங்களைப் புகுத்தி, வளத்தையும், மகிழ்ச்சியையும் வரவேற்கும் ஒரு முக்கியத் தமிழர் திருவிழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்.
வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்து, தங்கள் வீட்டு வாசலில் பலவகை கலர் கோலமாவு கொண்டு வண்ணமிகு கோலமிட்டு, அதன் மீது பரங்கிப் பூக்களை வைத்து புதுமைகளை வரவேற்கும் நாளாக இந்த போகிப் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர்.


