in

செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்ட புதிய அரசு கலைக் கல்லூரி கட்டிடத்தில் முதல்முறையாக பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்த மாணவர்கள்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டி பகுதியில் பகுதியில் செயல்பட்டு வரும் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 800 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
     
இந்நிலையில் எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த பொங்கல் விழா கொண்டாட்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் புத்தாடைகள் அணிந்து கல்லூரிக்கு வந்திருந்தனர்.

அப்போது மண் பானையில் மஞ்சள் குங்குமம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வைத்தும் பொங்கல் செய்து அதனை படைத்து அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

மேலும் ஆடல்-பாடல் மற்றும் கயிறு இழுத்தல், உரியடித்தல் விளையாட்டு உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றும், செல்ஃபி புகைப்படங்கள் எடுத்தும் சமத்துவ பொங்கல் எவ்வித வேறுபாடும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

What do you think?

கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை மற்றும் நிதி உதவி வழங்க கோரி பாம்பனில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய நாட்டுப்புற கலை நிகழ்ச்சியுடன் பொங்கல் விழா கோலாகலம்