வடலூரில் ரூபாய் 7.53 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்த அமைச்சர்கள்
கடலூர் மாவட்டம், வடலூரில் ரூபாய் 7.53 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடிய வள்ளலார் பேருந்து நிலையத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு இரு அமைச்சர் திறந்து வைத்தனர்.


|கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்திய செந்தில்குமார் முன்னிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.
பன்னீர்செல்வம் ஆகியோர் கடலூர் மாவட்டத்தில் ரூ.133 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு திட்ட பணிகளை திறந்து வைத்தனர்.
அதன் ஒரு நிகழ்வாக வடலூரில் இயங்கி வந்த பழைய பேருந்து நிலையத்தினை இடித்து விட்டு நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 100 வணிக கடைகள், தாய்மார்கள் பாலூட்டும் அறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட பேருந்து நிலையத்தினை வடலூர் வள்ளலார் பேருந்து நிலையம் என்ற பெயரில் இரு அமைச்சர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்வில் அரசு அதிகாரிகள்,
பொதுமக்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


