திருவாடானை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி தலைமையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், சமத்துவப் பொங்கல் விழா இன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது
திருவாடானை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிஷாந்த் தேவ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டு, நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் அனைவரும் வழிபாடு செய்தனர்.
இந்த விழாவின் ஒரு பகுதியாக வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
உரிப்பானை உடைத்தல்
1.கோலப்போட்டி
2.பாட்டுப் போட்டி
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நீதிபதி ஆண்டனி ரிஷாந்த் தேவ் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.


இந்நிகழ்வில் திருவாடானை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுரேஷ், செயலாளர் ஜெகன், பொருளாளர் வெங்கடேஷ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவின் முடிவில் அனைவருக்கும் பொங்கல் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


