in

சின்னங்குடியில் தீ விபத்தில் சேதம் அடைந்த வீடு பொருள்கள் ஆய்வு செய்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய பூம்புகார் எம் எல் ஏ.

சின்னங்குடியில் தீ விபத்தில் சேதம் அடைந்த வீடு பொருள்கள் ஆய்வு செய்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கிய பூம்புகார் எம் எல் ஏ.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சின்னங்குடி மீனவர் கிராமத்தில் வடக்கு தெருவை சேர்ந்த மாப்பிள்ளை சாமி வளர்மதி என்பவரின் கூரை வீடு சிலிண்டர் கசிந்து தீ விபத்து ஏற்பட்டது வீடு முற்றிலும் எரிந்து சேதமடைந்தது
 
மேலும் வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது இதனால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் தவித்த அந்த குடும்பத்தை நேரில் பார்த்து பாதிப்பு குறித்து ஆய்வு செய்து ஆறுதல் கூறிய பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் அந்த குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.

மேலும் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் அந்த குடும்பத்திற்கு அரசு மூலம் உதவி செய்வதாக தெரிவித்தார் அப்பொழுது மீனவ பஞ்சாயத்தார்கள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

What do you think?

இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பும் போது வெடி மருந்து வெடித்து ஏற்பட்ட விபத்தில் மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்

மயிலாடுதுறையில் தமிழர் திருநாள் திராவிட பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் உள்ளிட்ட போட்டிகளில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு