in

‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆக மொட்டை அடிச்சு நேர்த்திக்கடன்


Watch – YouTube Click

‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆக மொட்டை அடிச்சு நேர்த்திக்கடன்

 

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் ரிலீஸ் ஆகுறதுல இருக்குற சிக்கல்கள் தீரணும்னு, ஒரு பெண் நிர்வாகி மொட்டை அடிச்சு நேர்த்திக்கடன் செலுத்தியிருக்காங்க.

விஜய்யின் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ தணிக்கைச் சிக்கலால் பொங்கலுக்கு வராம தள்ளிப் போயிட்டு இருக்குறது அவரோட ரசிகர்களுக்குப் பெரிய கவலையைத் தந்திருக்கு.

இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த ஒரு ரசிகை செஞ்ச காரியம் இப்போ சோஷியல் மீடியாவுல செம வைரல். சென்னையை அடுத்த அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா மதன்.

இவங்க சாதாரண ரசிகை மட்டும் இல்ல, தமிழக வெற்றிக் கழகத்தோட (TVK) செங்கல்பட்டு வடக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகியாவும் இருக்காங்க.

தீவிர விசுவாசி: சின்ன வயசுல இருந்தே விஜய்யோட வெறித்தனமான ரசிகையான இவங்க, தன்னோட கையில தளபதியோட முகத்தை ‘டாட்டூ’வாகவே குத்தியிருக்காங்க.

‘ஜனநாயகன்’ படத்துக்கு வர்ற முட்டுக்கட்டைகள் எல்லாம் உடையணும்னு, அனகாபுத்தூரில் இருக்குற அயோத்தி அம்மன் கோவிலுக்குப் போய் வேண்டிட்டாங்க.

நேத்து அந்த வேண்டுதலை நிறைவேத்துறதுக்காகத் தன்னோட முடியை காணிக்கையா தந்து மொட்டை அடிச்சிருக்காங்க. மொட்டை அடிச்சதுக்கப்புறம் ஐஸ்வர்யா பேசும்போது ரொம்ப எமோஷனலா சில விஷயங்களைச் சொன்னாங்க:

“சினிமாவுல புரட்சி பண்றவங்களை வில்லன்கள் தடுப்பாங்க. ஆனா தளபதி விஷயத்துல ஆளுங்கட்சியினர் நிஜமாவே வில்லத்தனம் பண்ணி முட்டுக்கட்டை போடுறாங்க.”

“எத்தனை தடை வந்தாலும் சரி, எங்க தளபதி படம் கண்டிப்பா ரிலீஸ் ஆகும். அதுக்காக எந்த எல்லைக்கு வேணும்னாலும் போக நான் தயாரா இருக்கேன்”னு சொல்லி மிரள வச்சிருக்காங்க.


Watch – YouTube Click Shorts

What do you think?

மஞ்சள் குலை–கரும்பு அலங்காரத்தில் சங்கிலி பூதத்தார்: மார்கழி ஞாயிற்று மகா தரிசனம்

சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு. திரளான பக்தா்கள் பங்கேற்பு