ஆற்காடு பகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட துணை பொது செயலாளர்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆற்காடு ஊராட்சியில், சமத்துவ பொங்கல் விழா,இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் மகளிர் அணி மண்டல செயலாளர் ரிங்கு சுனில்குமார் முன்னிலையில் மாவட்ட மகளிர் அணி செயலாளர் தேவி பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டார் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து, புத்தாடை மற்றும் கரும்புகளை வழங்கினார்.


உடன் இந்நிகழ்வில் மாவட்ட கௌரவ தலைவர் சுனில் குமார்,மாவட்ட தலைவர் காமராஜ், ரிஷிவந்தியம் தொகுதி மாவட்ட தலைவர் பொன்முடி, மாவட்ட செயலாளர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.


