‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் வேணும்னே நிறுத்தல – நடிகர் சரத்குமார்
கோயம்புத்தூர்ல நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகிட்ட நடிகர் சரத்குமார், விஜய் பட ரிலீஸ் தள்ளிப்போனது பத்தி பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு ரொம்ப ஓப்பனா பதில் சொல்லியிருக்கார்.
சரத்குமார் சொன்ன முக்கியமான பாயிண்ட்ஸ்: மத்த படங்களுக்கும் இதே நிலைதான்: “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் வேணும்னே நிறுத்தல.
இதுக்கு முன்னாடி ‘தக் லைஃப்’ (Thug Life) மாதிரி எவ்வளவோ படங்களுக்கு இந்த மாதிரி சிக்கல் வந்திருக்கு.”
“ஜெயலலிதா அம்மா ஆட்சியில் ‘தலைவா’ படத்துக்குப் பிரச்சனை வந்தப்போ, விஜய் அமைதியா கைகட்டி ரோட்டுல நின்னாரே.. அதை மறந்துட்டீங்களா?”னு ஒரு போடு போட்டிருக்கார்.
அரசியல் அழுத்தம் இல்லை: விஜய் இப்போ ஒரு அரசியல் கட்சித் தலைவரா இருக்கிறதுனால தான் அவருக்கு நெருக்கடி கொடுக்குறாங்கன்னு சொல்றதுல உண்மை இல்லையாம்.
“சென்சார் போர்டுல அரசியல்வாதிகள் யாரும் மெம்பரா இல்ல. படத்துல தப்பு இருந்தா தணிக்கை பண்ண அவங்களுக்கு அதிகாரம் இருக்கு. சினிமா எடுக்கிறது சட்டத்துக்கு உட்பட்டு இருக்கணும்.
“”நானும் நடிச்ச ‘அடங்காதே’ படம் இன்னும் ரிலீஸ் ஆகாம தான் இருக்கு, அதுக்கு யாரும் குரல் கொடுக்கலையே? ஆனா ‘ஜனநாயகன்’ வரணும்ங்கிறது தான் என்னோட ஆசையும் கூட.
“காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்துல தலையிடுறது பத்தி கேட்டப்போ, “அவங்க திமுக கூட்டணியில இருக்காங்க, அதனால இதைப் பேசித்தான் ஆகணும்.
இதுல ஏதாவது அரசியல் லாபம் கிடைக்குமானு அவங்க பாக்குறாங்க”னு கிண்டல் பண்ணியிருக்கார்.

