போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, சிறுவர்கள்,காவலர்கள் உள்ளிட்ட 500-க்கு மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்பு
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கால் டாக்ஸ் பகுதிகளிலிருந்து துவங்கிய விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கால் டாக்ஸியில் தொடங்கிய போட்டி மேலையூரில் உள்ள தனியார் பள்ளி வரை சுமார் 7 கிமீ தொலைவில் போட்டி நடைபெற்றது.போட்டியில் பள்ளி பிரிவு சிறுவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் 12 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், பொதுப் பிரிவு ஆண்கள் மற்றும் பெண்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த மாரத்தான் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5000,இரண்டாம் பரிசாக 3000, மூன்றாவது பரிசாக 2000 மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் ஊக்குத்தொகையாக 1000 சராசரியாக வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் கலந்து கொண்டவர்களை ஊக்க தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி உற்சாகப்படுத்தினார் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட காவல்துறை சார்பாக செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


