in

ஐயப்ப தேவா சங்கத்தின் சார்பில் 1008 விளக்கு பூஜை

ஐயப்ப தேவா சங்கத்தின் சார்பில் 1008 விளக்கு பூஜை

 

நெல்லை நெல்லையப்பர் கோவில் சன்னதி தெருவில் ஐயப்ப தேவா சங்கத்தின் சார்பில் 1008 விளக்கு பூஜை நடைபெற்றது ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி ஐயப்பரை விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

திருவிளக்கு பூஜை நடைபெறும் பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஐயப்பன் விக்ரகத்திற்கு இஸ்லாமியர் ஒருவர் சாம்பிராணி புகையிட்டு வழிபட்டுச் சென்ற சம்பவம் அனைவரிடத்திலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் உள்ள ஐயப்ப தேவா சங்கங்களில் பழமையான சங்கமாக திகழ்வது நெல்லை டவுன் பகுதியில் அமைந்துள்ள ஐயப்ப தேவா சங்கம். இங்கு கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் பல்வேறு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 53வது ஆண்டாக நடைபெறும் லட்சார்ச்சனை விழா கடந்த 17ஆம் தேதி தொடங்கியது நாள்தோறும் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டு வந்த நிலையில் திருவிழாவின் கடைசி மூன்று நாட்கள் மிகவும் பிரசித்தி பெற்ற பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுவது வழக்கம் அதன்படி நெல்லையப்பர் கோவில் சன்னதி முன்பு உள்ள சாலையில் 1008 விளக்கு பூஜை இன்றைய தினம் நடைபெற்றது.

இதற்காக சுவாமி நெல்லையப்பர் சன்னதி தெருவில் ஐயப்பன் விக்ரகம் பல்வேறு வண்ண வாசனை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது தொடர்ந்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு சுவாமி முன்பு உள்ள திருவிளக்கு ஏற்றப்பட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும் அமைதி வேண்டியும் ஐயப்பரை பிரார்த்தனை செய்து திருவிளக்கு வழிபாடு நடத்தினர்.

சுவாமி நெல்லையப்பர் கோவில் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஐயப்ப விக்கிரகத்திற்கு அவ்வழியாக சென்ற இஸ்லாமியர் ஒருவர் சாம்பிராணி புகையிட்டு வழிபட்டது அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் நிறைவாக சுவாமி நெல்லையப்பர் மற்றும் திருவிளக்குகளுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

What do you think?

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்டஏகாதசி விழா பகல் பத்து எட்டாம் திருநாள்

கோலிவுட்டின் புது ‘டிராக்கன்’ பிரதீப் ரங்கநாதன்! மீண்டும் டைரக்டர் அவதாரம்