நிருபர்கள்கிட்ட பேசும்போது செம ‘பயர்’ நடிகை கஸ்தூரி
நேத்து காலைல 11 மணிக்கு நடிகையும், பா.ஜனதா நிர்வாகியுமான கஸ்தூரி திருப்பரங்குன்றம் கோவிலுக்கு வந்தாங்க.
சாமி தரிசனம் செஞ்சுட்டு, மலை மேல தீபம் ஏத்தணும்னு போராடி கைதான உள்ளூர் மக்களைச் சந்திச்சு சால்வை அணிவிச்சு வாழ்த்து சொன்னாங்க.
அப்புறம் நிருபர்கள்கிட்ட பேசும்போது செம ‘பயர்’ விட்டாங்க: “தீபம் ஏத்தணும்னு சொல்லி ஒருத்தர் உயிர் போயிருக்கு. ஆனா அதைக் கூட கொச்சையா பேசுறாங்க.
கனிமொழி எம்பி அந்த தீபத்தூண வெறும் ‘சர்வே கல்’னு சொல்றாங்க. நான் வேணும்னா தர்காவுக்கு வந்து கும்பிடுறேன், நீங்க எங்க தீபத்தூணுக்கு வந்து விளக்கேத்தத் தயாரா?
இந்துக்களோட நம்பிக்கையையும், கோர்ட் உத்தரவையும் அவமதிக்காதீங்க”ன்னு ஆவேசமா பேசினாங்க.
தொல். திருமாவளவன் சமீபத்துல முருகன் பெயர் பத்தி கேட்ட கேள்விக்கு கஸ்தூரி கொடுத்த பதிலடி இதுதான்: “திருமாவளவன் மேல எனக்கு மரியாதை இருந்துச்சு. ஆனா இப்போ அவர் கூடாத இடத்துல சேர்ந்து மனசாட்சி இல்லாம பேசுறாரு. முருகன், குமரன்-னு யாருக்காவது பெயர் இருக்கான்னு கேக்குறாரே? என் பையன் பேரே கார்த்திகேயன் தான்.
என் கணவர் பேரு குமார். கர்நாடகாவுல எத்தனை பேருக்கு முருகையான்னு பேரு இருக்கு தெரியுமா? அடுத்து மொட்டை அடிப்பீங்களா, அலகு குத்துவீங்களான்னு நக்கல் பண்ணிட்டு இருந்தா அவருக்கு நாங்க பதில் சொல்ல முடியாது.
அவருக்கு விஷயமும் தெரியல, நம்பிக்கையும் இல்ல.”அரசியல்ல இறங்கியிருக்குற நடிகர் விஜய் பத்தியும் கஸ்தூரி சில விமர்சனங்களை வச்சாங்க: “நண்பர் விஜய் கிறிஸ்துமஸ் விழாவுக்குப் போறாரு, சந்தோஷம்.
ஆனா கார்த்திகை தீபத்துக்கு ஒரு வாழ்த்து கூட சொல்லலையே? இப்போ எம்.ஜி.ஆர் பேரைச் சொல்லி அரசியல் பண்றாரு, முதலமைச்சர் ஆகணும்னு கனவு காணுறாரு. ஆனா இந்த திருப்பரங்குன்றம் விவகாரத்துல அவர் அமைதியா இருக்குறது தப்பு.
“கடைசியா, “எல்லா மதத்தையும் மதிக்கிறது தான் சனாதனம். திமுக-வோட இந்த இந்து எதிர்ப்புப் போக்குக்கு மக்கள் கண்டிப்பா பாடம் புகட்டுவாங்க”னு ஒரு எச்சரிக்கையையும் கொடுத்துட்டு கிளம்புனாங்க.


