அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் அனைத்து கட்சியினர் மரியாதை
விருத்தாசலத்தில் அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை ஒட்டி, அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.
சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 69 ஆவது நினைவு நாளை ஒட்டி, கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள, அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவ சிலைக்கு, இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை அவர்கள் …. கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழுக்கமிட்டார்.
அதனைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் மணிகண்டன் அவர்கள் ….கட்சி நிர்வாகிகளுடன் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, வீரவணக்கம் முழக்கமிட்டார்.
அதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி நகர தலைவர் ரஞ்சித்குமார் அவர்கள் …. கட்சி நிர்வாகிகளுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்பு தொடர்ச்சியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், திராவிடர் கழகம், பகுஜன் சமாஜ் கட்சி, ஆசிரியர் கூட்டமைப்பு உள்ளிட்டோர் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வீரவணக்கம் முழக்கம் எழுப்பினர்.

