புனுகீஸ்வரர் திருக்கோயிலில் மூன்றாவது சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம்
மயிலாடுதுறை ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் திருக்கோயிலில்
கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
வேத காலத்தில் தட்சன் யாகத்தில் கலந்து கொண்ட சாபம் நீங்க இந்திரன் புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு உள்ள சிவன் மற்றும் சாந்தநாயகி அம்மனை வழிபாடு செய்ததாக புராண வரலாறு கூறுகிறது.
மேலும் அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் புனுகு பூனை உயர்ந்த வாசனை திரவியமான புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு வழிபாடு நடைபெற்றது என்றும் தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோயிலை அமைத்தான் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பழமையும் பல்வேறு பெருமைகளும் வாய்ந்த இக்கோயிலில் கார்த்திகை மாத மூன்றாவது சோமவாரத்தையொட்டி 1008 சங்காபிஷகம் நடைபெற்றது.

முன்னதாக புனிதநீர் நிரப்பபட்ட சங்குகள் வைக்கப்பட்டு பின்னர் யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாஹுதி நடைபெற்று தீபாராதனை செய்து தொடர்ந்து சங்குகளில் நிரப்பபட்ட புனித நீரால் மூலவர் புனுகீஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சிறப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றதுது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


